உலக சந்தையில் ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டது கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் முக்கிய விலை நிர்ணய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 3.55 அமெரிக்க டொலரால் அதிகரித்து, 116.72 டொலராகப் பதிவாகியுள்ளது.
இது 3.14 சதவீத அதிகரிப்பாகும். கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னர், அதாவது சுமார் ஆறு மாத காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலையாகவும் இது அமைந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ. ரக கச்சா எண்ணெயின் விலையும் 3.80 டொலரால் அதிகரித்து, 103.27 டொலராகப் பதிவாகியுள்ளது. இது 3.8 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த வாரத்தில் மாத்திரம் பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தாலும், டபிள்யூ.டி.ஐ. ரக எண்ணெயின் விலை 2.3 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ளமை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அங்கு நிலவும் பதற்றமான சூழல் சர்வதேச எண்ணெய் சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் முக்கிய விலை நிர்ணய அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 3.55 அமெரிக்க டொலரால் அதிகரித்து, 116.72 டொலராகப் பதிவாகியுள்ளது.

இது 3.14 சதவீத அதிகரிப்பாகும். கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னர், அதாவது சுமார் ஆறு மாத காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலையாகவும் இது அமைந்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ. ரக கச்சா எண்ணெயின் விலையும் 3.80 டொலரால் அதிகரித்து, 103.27 டொலராகப் பதிவாகியுள்ளது. இது 3.8 சதவீத அதிகரிப்பாகும்.
இந்த வாரத்தில் மாத்திரம் பிரெண்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தாலும், டபிள்யூ.டி.ஐ. ரக எண்ணெயின் விலை 2.3 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ளமை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மத்திய கிழக்கு பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அங்கு நிலவும் பதற்றமான சூழல் சர்வதேச எண்ணெய் சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.