Asia Cup Rising Stars 2026 : 48 ஓட்டங்களால் இந்தியா அணியை வீழ்த்திய பாகிஸ்தான்

ACC Men’s Asia Cup Rising Stars 2026 தொடரின் 8ஆவது போட்டியில் பாகிஸ்தான் A அணி, இந்தியா A அணியை 48 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது. தோஹாவில் உள்ள West End Park International Cricket Stadium மைதானத்தில் நடைபெற்ற Group B போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் A அணி 49.2 ஓவர்களில் 313 ஓட்டங்களைப் பெற்றது.

314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய இந்தியா A அணி, 49.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 48 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் A அணி, ACC Men’s Asia Cup Rising Stars தொடரில் இந்தியா A அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது.