
இலங்கையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ எலுமிச்சை 2,000 ரூபாவாகவும், பச்சை மிளகாய் 800 ரூபாவாகவும், தக்காளி மற்றும் பாகற்காய் தலா 800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், கரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. நாட்டில் அண்மையில் பெய்த கடும் மழையினால் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு கிடைக்கும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது.
இதனால் நுகர்வோர் கொள்வனவுகளை மட்டுப்படுத்தியுள்ள நிலையில், வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
