
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 33 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 1,010 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 8 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 31.7 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர், ரணில் விக்கிரமசிங்கவின் 26 மாத பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 33 வெளிநாட்டுப் பயணங்களில் 421 பேர் உடன் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2022 செப்டம்பர் 17ஆம் திகதி பிரித்தானியப் பயணம் முதல் 2024 ஜூன் 8ஆம் திகதி இந்தியப் பயணம் வரையிலான செலவுகள் இதில் உள்ளடங்குகின்றன.
இதே காலப்பகுதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 8 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றுக்காக மேலதிக அல்லது இணைந்த கொடுப்பனவுகள் எதனையும் அவர் கோரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
