
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இலங்கையின் முஹமட் சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான T47 நீளம் பாய்தல் போட்டியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து அவர் இந்தப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இவ்விளையாட்டு போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே போட்டியில் பங்கேற்ற இலங்கையின் யூசுப் சல்மான் 6.28 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காவது இடத்தையும், புத்திக ஹேஷான் 6.11 மீற்றர் தூரம் பாய்ந்து ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.


