முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளித்த பின்னரே முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார்.