
கத்தாரில் இயங்கி வரும் Sri Lankan Community Welfare Federation (CWF Qatar) அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், புதிய நிர்வாகக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் கத்தாரில் வாழும் இலங்கையர்களின் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வரும் இந்த அமைப்பின் தலைவராக முஹம்மத் அக்ரம் முஹம்மத் பஷீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக முஹம்மத் அம்தாஜ் அபூபக்கர் மற்றும் பொருளாளராக முஹம்மத் அர்கம் முஹம்மத் லாஹிர் உள்ளிட்ட பலர் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகக் குழு, சமூக நலன், கல்வி, சுகாதாரம், இளைஞர் மேம்பாடு, அவசர உதவிகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உறுதியளித்துள்ளது. சமூக உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்குதார அமைப்புகளுடன் இணைந்து சேவைகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக CWF Qatar தெரிவித்துள்ளது.


