
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் ஆசிரியர் சேவைக்கு 20,000 பேரையும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 12,000 பேரையும், வருமானவரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத்துறைக்கு 3,000 பேரையும் இணைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அவர் நினைவூட்டியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தற்போது வேலையின்றி உள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தேவையான நிதியை ஒதுக்கி, திட்டத்தை காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.


