
ஈராக்கில் 23 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்க இராணுவ இருப்பு இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2003ஆம் ஆண்டு அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனின் ஆட்சியை அகற்றும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈராக்கில் நுழைந்தன. அப்போது ஈராக்கிடம் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. எனினும், பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் ஈராக்கில் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வந்தன.
2024ஆம் ஆண்டு வாஷிங்டன் மற்றும் பாக்தாத் அரசுகளுக்கிடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீதமிருந்த அமெரிக்கப் படைகளும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முழுமையாக வெளியேறியுள்ளன. இதன் மூலம் 2003ஆம் ஆண்டு தொடங்கிய அமெரிக்காவின் நீண்டகால இராணுவ நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.


