திருமணங்கள், பிறந்தநாள் விழாக்களுக்கு இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL), திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டண வசூலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இதுதொடர்பான இறுதி தீர்மானம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இந்த உரிம முறை தொடர வேண்டுமா என்பது உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நிகழ்வுகளில் இசை வழங்கும் DJ-களுக்கான உரிமக் கட்டணமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த உரிம நடைமுறை வணிக ரீதியாக இசை பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் அரங்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வீடுகளில் நடைபெறும் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் ACPOSL விளக்கியுள்ளது.