
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இடம்பெற்ற திடீர் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 7 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலையின் சமையலறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடப் பகுதிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பொலன்னறுவை பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


