விசாரணைக்கு ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ஷ: புதிய திகதி கோரி கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதன்மை பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) நிதியக் கணக்கு தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.எனினும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளதால், அவர் முன்னிலையாவதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவரது தரப்பிலிருந்து பொலிஸாருக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.