ஈரான் – அமெரிக்கா இடையே உச்சக்கட்ட மோதல்! மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகம்!

மத்திய கிழக்கில் ஈரானுடன் தீவிரமடைந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், பிராந்தியப் போரை மேலும் விரிவுபடுத்தக்கூடிய பாரிய முடிவொன்றை எடுக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுடனான மோதலை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் ஒரு பெரிய அளவிலான தாக்குதல் தொடரை நடத்த வேண்டுமா என்பது குறித்துத் தாம் தீவிரமாக யோசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகைமைச் சூழலை மேலும் தீவிரமாக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை வழியே பயணிக்க முயன்ற டோகோ நாட்டுக் கொடியுடனான எண்ணெய் தாங்கிப் படகு (Oil Tanker) மீது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலால் குறித்த கப்பலில் தீப்பற்றி, அதன் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் இத்தாக்குதல்கள், உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

அமெரிக்கா எடுக்கவுள்ள அடுத்தகட்ட முடிவுகளால் சர்வதேச எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மை முற்றிலும் மாறுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் இச்சூழ்நிலையை மிகுந்த கவலையுடன் உற்றுநோக்கி வருகின்றன.