
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் இன்று (17) விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதுமாலெப்பை,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீரா சாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


