
பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தி மக்களின் அன்றாடப் பயணங்களை இலகுவாக்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்டுள்ள பொலன்னறுவை இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) டிப்போவை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின் போது, போக்குவரத்துத் துறையின் மனிதவள மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய நான்கு புதிய ‘சிசு செரிய’ பேருந்து அனுமதிப்பத்திரங்களும் கையளிக்கப்பட்டன.
நவீன பேருந்துகள் மட்டுமன்றி பொறுப்புமிக்க சேவையே நாட்டின் போக்குவரத்து வளர்ச்சிக்கு அடிப்படை என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


