நிரந்தரத் தீர்வை நோக்கி எனும் கருப்பொருளில் முஸ்லிம் பெண் அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான முன்மொழிவும் கோரிக்கைகளும் அடங்கிய மசோதா அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் அனுப்பி வைப்பு.

(இஸட்.ஏ.றஹ்மான்)
ஒலுவில் விசேட செய்தியாளர்

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் உட்பட ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண் அரச ஊழியர்கள் தங்களது மதக் கடமைக்கு அல்லது மத அடையாளத்துக்கு ஏற்ப கௌரவமான ஆடை (வழக்கத்தில் எப்பெயரில் இருந்தாலும்) அணிந்து கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்கும் வகையில்

புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுதல் அல்லது நடைமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கான “ஆடை” தொடர்பான சுற்றறிக்கையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பான ஏற்பாடுகளுக்கான “முன்மொழிவும் கோரிக்கைகளும்”
அடங்கிய ஆவண தொகுப்பு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால்
அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், கௌரவ பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ சுகாதார மற்றும் ஊடகதுறை அமைச்சர் ஆகியோருக்கு இன்று 2026.08.31 ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது

இம் முன்மொழிவும் கோரிக்கைகளும்’ அடங்கிய ஆவண தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இனம், மொழி, சமயம், சாதி, பால்நிலை என்பவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாத பன்மைத்துவ அடையாளங்களை மதிக்கின்ற மற்றும் அவற்றின் இருப்பினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துகின்ற இலங்கை எனும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய ஒற்றுமையை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
“வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற கோட்பாட்டுடன்
செயற்பட்டுக் கொண்டிருப்பதை ஜனநாயக தேசம் ஒன்றின் நான்கு தூண்களில். ஒன்றாக விளங்கும் ஊடகத் துறையின் அங்கத்தவர்களை கொண்ட அ