ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு: பக்கசார்பற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

குளியாப்பிட்டியவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறும் அரசாங்கம் இக்குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அரிசி, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் சிறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.