ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க பிராந்தியம் என டிரம்ப் அறிவிப்பு: ஈரான் கண்டனம்

ஈரான் மீதான ராணுவ முற்றுகை தொடரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை “அமெரிக்க பிராந்தியம்” என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.தெற்கு கரோலினா பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஹோர்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

மேலும், “ஈரான் மீது மீண்டும் குண்டு வீச வேண்டுமா?” என்றும் நகைச்சுவையாகக் கூறினார். உலக கடல்வழி எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் இந்த முக்கிய நீர்வழியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், இதுவரை 68 வணிகக் கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள சூழலில் வெளியான டிரம்பின் இந்தக் கூற்றை, “பகற்கனவு மற்றும் மாயை” என்று ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.