
வரலாறு காணாத கடன் சுமையில் அமெரிக்கா
==========
அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடல் வரலாற்றில் இல்லாத வகையில் முதன்முறையாக 40 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,840 லட்சம் கோடி) கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட தினசரி நிதி அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 2026 நிதியாண்டின் இறுதிக்குள் 3,773 லட்சம் கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே கடன் தொகை மிகவேகமாக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், ராணுவச் செலவுகள், சமூகப் பாதுகாப்பு நிதி மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் ஏற்பட்ட வட்டிச் சுமையே இதற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், செலவினங்களைக் குறைப்பதாக உறுதியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.


