
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை சர்ச்சை தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெளிவுபடுத்தினார். இனவாத நோக்கங்களுக்காக இச்சம்பவம் பயன்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும், சேவை தடையின்றி இயங்கவே தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் மாற்றங்கள் தேவைப்பட்டால், அமைச்சின் சீருடைக் குழுவின் ஒப்புதலோடு முறையான சுற்றறிக்கை மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இருப்பினும், பாரம்பரிய உடைக் கட்டுப்பாடுகளால் எவரும் அரச சேவையில் இணைவது தடுக்கப்படக்கூடாது எனவும், அனைத்து இனத்தவர்களின் கலாசார உரிமைகளைப் பாதுகாக்கும் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கத் தயார் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.


