எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் இயங்குவதாக சமூக ஊடகங்களில் போலிப் பிரசாரம் செய்த நபர் கைது

அக்கராயன்குளம், பாலாய் காப்பகத்தில் எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாமொன்று நடாத்தப்படுவதாக சமூக ஊடக காணொளி மற்றும் ஊடக சந்திப்பு மூலம் போலித் தகவல்களைப் பரப்பிய 46 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.

போரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.