
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அவசியமற்ற முறையில் ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தமது தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு 1.43 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, பழங்கால ‘சந்திரவட்டக்கல்’ திருடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கிலும் அவருக்கு ஏற்கனவே பிணை மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


