
ரசாங்கத்தின் தேசிய வீட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் அஸ்வெசும பயனாளி ஒருவருக்கு சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் வீடற்ற குறைந்த வருமானம் பெறும் 30,000 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பல அமைச்சுக்களின் கூட்டுப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், சமுர்த்தி திணைக்களம் மட்டும் 1,000 இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட எதிர்பார்க்கிறது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தபட்சம் மூன்று வீடுகளாவது நிர்மாணிக்கப்படுவது இதன் பிரதான இலக்காகும்.


