5 மாகாணங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை – 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாட்டின் 5 மாகாணங்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (07) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில், நாட்டின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் (Amber Alert) பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.