கத்தாருக்கு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மருந்துகளை கொண்டு செல்ல முன்அனுமதி கட்டாயம்!

கத்தாருக்கு வரவிருக்கும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காகக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளைக் (Controlled Medicines) கொண்டு செல்ல முன்அனுமதி பெற புதிய மின்னணு முறையைக் கத்தார் பொது சுகாதார அமைச்சகம் ஆகஸ்ட் 5 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பயணிகள் இணைய வழியிலேயே அனுமதிக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்ப நிலையை அறியவும், அனுமதிச் சீட்டைப் பெறவும் முடியும்.

தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 3 வேலை நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். எனவே, பயணிகள் தங்களின் பயணத் தேதிக்குக் குறைந்தபட்சம் 5 வேலை நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பயணிகள் MoPH இணையதளம் மூலம் செல்லுபடியாகும் மருத்துவச் சீட்டை இணைத்து விண்ணப்பிக்கலாம்.