
வங்கதேசக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனின் மகுராவில் உள்ள இல்லம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நடத்திய இணையவழி செய்தியாளர் சந்திப்பில் ஷகிப் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கற்களை எறிந்து ஜன்னல்களை உடைத்த தாக்குதல்தாரிகள், பெற்றோல் குண்டுகளை வீசி வீட்டிற்குத் தீ வைக்கவும் முயன்றுள்ளனர். தாக்குதல் நடந்தபோது வீடு காலியாக இருந்ததால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
எல்.பி.எல் (LPL) தொடரில் விளையாடுவதற்காக ஷகிப் தற்போது இலங்கையில் உள்ளார். 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஷகிப் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


