
மலையகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வட்டவளை பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையொன்றுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், அதன் இயல்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலை வளாகத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நீர்நிலைகளுக்கு அருகில் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்திற் கொண்டு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அசாதாரண காலநிலை தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கையும் அறிவுறுத்தலும் விடுத்துள்ளனர்.


