
ஹட்டன், பொல்பிட்டிய, மொரஹேனேகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலைக்கு மத்தியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அனர்த்த நிலைமைகள் காரணமாக மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.


