ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு தொடர்ந்து உயர்வு – பாதுகாப்புச் செயலாளர் தகவல்!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.முந்தைய மதிப்பீடுகளை விட இது சுமார் 8 பில்லியன் டொலர் உயர்வாகும். செனட் சபையின் நிதிக்கழு (Senate Appropriations Committee) முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலமளித்தபோதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான எதிர்பார்க்கப்படும் செயல்பாட்டுச் செலவுகளும் இதில் அடங்கும் என அவர் சட்டவாக்கக் குழுவிடம் (Lawmakers) சுட்டிக்காட்டினார்.

இம்மாத்தின் தொடக்கத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, கூட்டுப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் டான் கெயினுடன் (Dan Caine) இணைந்து செனட் சபையின் கேள்விகளுக்குப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் பதிலளித்தது இதுவே முதல் முறையாகும்.