
வாட்ஸ்அப் செயலியில், தற்போது ஒன்லைனில் இருக்கும் பயனர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய ‘Green Dot’ அம்சம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ஒன்லைனில் இருப்பதைப் பச்சை நிறப் புள்ளி மூலம் காட்டுவது போலவே, இந்த வசதி மூலம் எந்தப் பயனர்கள் தற்போது வாட்ஸ்அப்பில் ஒன்லைனில் உள்ளனர் என்பதை விரைவாக அறிந்துகொள்ள முடியும்.
தற்போது குறைந்தளவிலான பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய வசதி, வெற்றிகரமாகச் செயல்பட்டால் எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


