
கத்தார் போக்குவரத்து அமைச்சகத்தின் மேற்பார்வையில், ‘கர்வா’ (Mowasalat – Karwa) நிறுவனம் தனது மின்சார ரோபோடாக்சி (Robotaxi) சேவையின் முன்னோடிச் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
தோஹா தலைமையகம் மற்றும் பழைய துறைமுகத்திற்கு இடையே நடைபெற்ற இந்தச் சோதனை, கத்தாரின் ‘தன்னாட்சி வாகன உத்தி’ (Autonomous Vehicles Strategy) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய முதற்கட்ட சோதனையில், ஓட்டுநர் இருக்கையில் பாதுகாப்பு அதிகாரியுடன் 2,500 பயணங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதில் 94% பயணங்கள் மனித தலையீடு இன்றி நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் எவருமின்றி ரிமோட் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இரண்டாம் கட்ட சேவையைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விரைவில் கர்வா செயலியில் இந்த சேவை பொதுமக்களுக்குக் கிடைக்கும்.


