
நேபாள கால்பந்து சங்கத்தில் ஏற்படும் மூன்றாவது தரப்பினரின் (வெளிப்புற) தலையீடுகள் காரணமாக, அந்தச் சங்கத்திற்குத் தடை விதிப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நேற்று (25ஆம் தேதி) அறிவித்துள்ளது.
இதன் மூலம், சர்வதேச கால்பந்து சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகியவற்றினால் நடத்தப்படும் எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்கேற்கும் வாய்ப்பை நேபாள கால்பந்து சங்கம் இழக்கிறது.
‘பிஃபா’ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அதன் கவுன்சிலினால் இந்த முடிவு நேற்று முன்தினம் (24ஆம் தேதி) எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நேபாளத்தின் தேசிய அணிகள் மற்றும் கால்பந்து கழகங்கள் இனி பிஃபா அல்லது ஆசிய கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தடை நீக்கப்படும் வரை நேபாள கால்பந்து சங்கத்தின் உறுப்பு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள், சர்வதேச மற்றும் ஆசிய கால்பந்து நிதியுதவிகள், அபிவிருத்தித் திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் கல்விப் பாடநெறிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் இழப்பர்.


