
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்தது.
போட்டியின் இறுதியில் அர்ஜென்டினா வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். ஸ்பெயின் கேப்டன் ரொட்ரியை அர்ஜென்டினா வீரர் நஹுயல் மொலினா தாக்கியது உட்படப் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறின.
இதனையடுத்து, அர்ஜென்டினா அணி மீது ஃபிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, “அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தித் தொடங்கப்பட்ட ஆன்லைன் மனுவில் 2.33 கோடிக்கும் அதிகமானோர் (23,316,108) கையெழுத்திட்டுள்ளனர்.
170 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வெறும் 7 நாட்களில் இதில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த மனு கின்னஸ் உலக சாதனையை எட்டும் நிலையை நெருங்கியுள்ளது.


