மயிலாடுதுறையில் மருத்துவ மாணவி அப்ரா ஷெரினுக்கு “வெற்றிக் கொடி கட்டு” விருது வழங்கி கௌரவிப்பு!

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ட்ரீம்ஸ் இந்தியா மாத இதழ் இணைந்து நடத்திய சிறப்பு விருது வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் கல்வியில் சாதனை படைத்த சிறந்த மாணவர்களுக்கு “வெற்றிக் கொடி கட்டு” விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படது.இந்த ஆண்டு இந்த விருதிற்கு, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள ஃபெர்கானா அரசு மருத்துவக் கல்லூரியில் (Fergana State Medical University) இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மருத்துவ மாணவி மு.பா அப்ரா ஷெரின் (M.B. Afra Sherin) தேர்வு செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் – கோணுலாம்பள்ளத்தைச் சேர்ந்த கத்தாரில் பணிபுரியும் முகமது பாக்கர் அவர்களின் மகளான இவர், கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வுகளில் இரண்டு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். வெளிநாட்டில் மருத்துவம் பயின்று வரும் நிலையிலும், தொடர்ச்சியாக கல்வியில் சிறந்து விளங்கும் அவரது முயற்சியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.இந்த விழாவில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.