வாட்ஸ்அப்பில் புதிய ‘Strict Account Settings’: சைபர் தாக்குதல்களைத் தடுக்க மெட்டா அதிரடி!

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘Strict Account Settings’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ள நபர்களுக்காக இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.*ஏன் இந்த புதிய அம்சம்?*வாட்ஸ்அப்பில் ஏற்கனவே ‘End-to-End Encryption’ எனப்படும் தகவல்களை ரகசியமாக வைக்கும் முறை இருந்தாலும், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் போன்றவர்கள் குறிவைக்கப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு (Targeted Cyberattacks) உள்ளாக வாய்ப்புள்ளது. இவர்களை உளவு மென்பொருள்கள் மற்றும் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கவே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.*இந்த அம்சத்தின் சிறப்பம்சங்கள்:*1. நீங்கள் ‘Strict Account Settings’ மோடை ஆன் செய்தால், பின்வரும் பாதுகாப்புகள் தானாகவே அமலுக்கு வரும்:2. உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்களிடமிருந்து வரும் போட்டோக்கள் மற்றும் கோப்புகள் (Attachments) தானாகவே பிளாக் செய்யப்படும்.3. மெசேஜ்களில் வரும் இணையதள லிங்க்குகளின் ‘Preview’ காட்டப்படாது. இதன் மூலம் உங்கள் IP முகவரி திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.4. உங்களின் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத எண்களில் இருந்து வரும் கால்கள் தானாகவே ‘Silence’ செய்யப்படும்.5. உங்களை யாராவது வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க வேண்டுமானால், அதற்கு உங்களின் அனுமதி (அ) உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற கட்டுப்பாடு பலப்படுத்தப்படும்.*எப்படி ஆக்டிவேட் செய்வது?*இந்த அம்சம் தற்போது உலகளவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் போனில் இந்த வசதி வந்தவுடன் பின்வரும் முறையைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளலாம்:*Settings > Privacy > Advanced > Strict Account Settings*ஆப்பிளின் ‘Lockdown Mode’ மற்றும் கூகுளின் ‘Advanced Protection Mode’ ஆகியவற்றுக்கு இணையாக வாட்ஸ்அப் இந்த வசதியைக் கொண்டு வந்துள்ளது. இது சாதாரண பயனர்களுக்குக் கட்டாயம் இல்லை என்றாலும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த செட்டிங்கை ஆஃப் செய்து கொள்ளலாம்.