
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் ரூ.77,000 குறைந்துள்ளது, இன்று (23) மட்டும் தங்கத்தின் விலை ரூ.10,000 குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.302,300 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


