
ஸ்பெயினின் டோலிடோ பகுதியில் இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்ரிட் நகரையும் தெற்கு அண்டலூசியா பிராந்தியத்தையும் இணைக்கும் பாதையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான Iryo ரயிலில் 146 பயணிகளும், Renfe ரயிலில் 397 பயணிகளும் பயணித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


