பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிரான 22 மனுக்கள் இன்று விசாரணை!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த விசாரணையின் பின்னர் தெரியவரும்.