எரிபொருள் நிலையத்திற்குள் புகுந்த காட்டு யானை: உயிர்தப்பிய ஊழியர்!

கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரத்மல்கஹவெவ கிராமத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் நேற்று (06) இரவு காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.

எரிபொருள் நிலையத்திற்குள் நுழைந்த யானை, அங்கு எரிபொருள் விநியோகிக்கும் இயந்திரத்திற்கு அருகில் இருந்த மேசையைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. இதன்போது அங்கு கடமையிலிருந்த ஊழியர் ஒருவர், அச்சத்தில் அலறியடித்து ஓடி உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சிறுகடவுத் நகரமாக உருவெடுத்து வரும் ரத்மல்கஹவெவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் நீண்டகாலமாகவே தீவிரமான காட்டு யானை அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இப்பகுதிகளில் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன், வீடுகள், சொத்துக்கள் மற்றும் விவசாயப் பயிர்களுக்கும் தொடர்ச்சியாகப் பெரும் சேதம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.