துபாய் பாடசாலைகளில் புகைப்படங்கள் எடுக்கப் புதிய கட்டுப்பாடு!


துபாயில் உள்ள பாடசாலைகளில் பிற மாணவர்கள் மற்றும் ஊழியர்களை அனுமதியின்றி புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. வகுப்பறைகள், விளையாட்டரங்குகள் மற்றும் பிள்ளைகளை அழைத்து வரும் பகுதிகள் வரை இக்கட்டுப்பாடு பொருந்தும்.

மேலும், பிற மாணவர்களின் படங்களை வாட்ஸ்அப் குழுக்களிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பகிர்வதைத் தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்குப் பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை, முக்கிய தருணங்களைப் பதிவு செய்யப் பாடசாலைகள் பாதுகாப்பான வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.