FIDE உலக சதுரங்க போட்டியில்பங்கேற்ற இலங்கை சதுரங்கஅணிகள் தாயகம் திரும்பின

2026 ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் சமர்கந்தில் நடைபெற்ற 46ஆவது FIDE உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை ஓபன் மற்றும் மகளிர் சதுரங்க அணிகள் இன்று காலை தாயகம் திரும்பின.

உலகின் பலம் வாய்ந்த சதுரங்க அணிகளுடன் நேருக்கு நேர் போட்டியிட்டு, எமது வீரர், வீராங்கனைகள் சர்வதேச சதுரங்க அரங்கில் இலங்கைக் கொடியை பெருமையுடன் ஏந்தி, இலங்கை சதுரங்கத்தின் திறமை, உறுதிப்பாடு மற்றும் போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, உலக தரவரிசையில் 77ஆவது இடத்தில் இருந்து போட்டியை ஆரம்பித்த இலங்கை மகளிர் சதுரங்க அணி, 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதி தரவரிசையில் 34ஆவது இடத்தை பெற்றது. அத்துடன், Category C பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று, இலங்கை சதுரங்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்தது.