
கிங் கங்கை (Gin Ganga) மேலதிகமாக வான்பாய்ந்து பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக, காலி மாவட்டத்தின் மாபலமக (Mapalagama) பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள கடற்படை பேரிடர் நிவாரணக் குழுவினர், நேற்று (25) அப்பகுதி மக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்காகத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளனர்.மேலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக, தென் மாகாணத்தின் தவலம, ஹினிதும, மாபலமக, தொடங்கொட, உடுகம, நாகொட மற்றும் ஹபரகொட ஆகிய பகுதிகளில் ஏழு (07) கடற்படை பேரிடர் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கிங் கங்கை பெருக்கெடுத்ததால் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்காக, பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இக்கடற்படை நிவாரணக் குழுவினர் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.


