
நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


