
இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (23) பவுண் ஒன்று 373,000 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று (24) அது 371,000 ரூபாவாக சரிவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 341,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் அடிப்படையிலான தற்போதைய சந்தை விலைகள்: * 24 கரட் தங்கம் (1 கிராம்): 46,375 ரூபாய் * 22 கரட் தங்கம் (1 கிராம்): 42,663 ரூபாய்சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார நகர்வுகள் காரணாமாக தங்கத்தின் விலையில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


