
கொழும்பு, நாரஹேன்பிட்டிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள (DMT) தலைமை அலுவலக சூழலில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட நபர்களையும், சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்களையும் அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக செப்டம்பர் 1ஆம் திகதி பதவியேற்ற ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு, சேவை பெற வரும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு 2025 ஜூலை மாதம் ரூ. 10,000 லஞ்சம் பெற்ற இடைத்தரகர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


