கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி: ரூ. 15.2 கோடி ஒதுக்கீட்டில் நாடு தழுவிய திட்டம் ஆரம்பம்!

மாடுகள் மற்றும் ஆடுகளைக் கோமாரி நோய் (FMD), அம்மை நோய் (LSD) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க நாடு தழுவிய இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அமைச்சு அறிவித்துள்ளது.குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின் போது நோய்கள் பரவுவதைத் தடுத்து, கால்நடை வளத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இதற்காக ரூ. 152 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோமாரி நோய்க்கு ரூ. 79.2 மில்லியனும், அம்மை நோய்க்கு ரூ. 73 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.தடுப்பூசிகள் அனைத்துப் பிரதேச கால்நடை மருத்துவ மையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.