
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் தாதியர்கள் மத முறைப்படி தலையையும் கால்களையும் மூடும் ஆடைகளை அணிந்து பணிக்குச் சென்றபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஏனைய அரச வைத்தியசாலைகளில் உள்ள சுதந்திரம் இங்கு மறுக்கப்படுவது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கேற்ப ஆடை அணிய உடனடியாக புதிய உத்தரவு பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இவ்விவகாரத்தை இனவாதமின்றி மனிதாபிமானத்துடன் அணுகி, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தினார்.


