அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டம்பர் 19 முதல் விதிகளை மீறினால் 1,000 ரூபா அபராதம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்து உயிரிழப்புகளைக் குறைக்க, எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அனைத்து வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு ஆசனப்பட்டி (Seatbelt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணிகளுக்கும் இது பொருந்தும் என்பதுடன், மீறுவோருக்கு 1,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்த வழங்கப்பட்ட சலுகைக் காலம் செப்டம்பர் 19 உடன் முடிவடைவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கூறினார். 2025 செப்டம்பர் 25 திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க வர்த்தமானிக்கு அமைவாக இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.