குவைத் – கொழும்பு விமான சேவை இன்று முதல் மீண்டும் வழமைக்கு!

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் – கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை தொடர்பில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.