
கத்தாரில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணித்தபோது அதன் மீது ஏவுகணை தாக்கியதாக பாதுகாப்பு உளவு நிறுவனங்கள் மற்றும் கப்பல் கண்காணிப்புத் தகவல்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது.
ஓமன் கடலோரப் பகுதிக்கு அருகில் ஹார்முஸ் ஜலசந்தியில் இரவு நேரத்தில் கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்தக் கப்பல் பாதிக்கப்பட்டது என்ற விவரத்தை UKMTO உடனடியாகக் குறிப்பிடவில்லை. மேலும், இதுவரை எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


